கொரோனா பரிசோதனை முடிவில் குழப்பம்: பச்சிளம் குழந்தையுடன் அலைக்கழிக்கப்பட்ட பெண்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தூத்துக்குடியில் கொரோனா பரிசோதனை முடிவுகளை அறிவிப்பதில் ஏற்பட்ட குழப்பத்தால் பிறந்து 8 மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தையுடன் இளம்பெண் ஒருவர் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு கடந்த சனிக்கிழமை ஈராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த பெண் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று மதியம் அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.

image


Advertisement

இந்நிலையில், திடீரென நேற்று இரவு 10 மணிக்கு மீண்டும் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்ட ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகக் கூறியுள்ளனர். இதனால் குழப்பமடைந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம், தாய் மற்றும் குழந்தையை ஆம்புலன்ஸ் மூலமாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளது.

image

ஆனால் அங்கும் அந்த பெண்ணுக்குச் சிகிச்சையளிக்க அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக தாயும், பச்சிளம் குழந்தையும் தனியார் ஆம்புலன்சிலேயே காத்துக்கிடந்துள்ளனர். சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பின் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அந்த பெண் அனுப்பிவைக்கப்பட்டார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement