சேலம்: கொரோனா தொற்று பரப்பியதாக ஒருவர் மீது வழக்குப்பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா தொற்று பரப்பியதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

சேலம் மாநகராட்சி 54-வது வார்டுக்கு உட்பட்ட சீரங்கன் தெருவில் மாநகராட்சி கண்காணிப்பு குழுவினர் கணக்கெடுப்பு பணியின்போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவி, மகன்கள் உட்பட மேலும் நான்கு பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து அப்பகுதியில் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தீவிர சோதனை நடத்தியதில் இக்குடும்பத்தினருடன் தொடர்பில் இருந்த 21 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதிசெய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


Advertisement

image

மதுரை: முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.சுந்தர்ராஜன் காலமானார் 

குறிப்பாக சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மூலமாகவே கொரோனா வைரஸ் பரவுவதாக மாவட்ட சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதனை கட்டுப்படுத்த சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. கட்டுப்படுத்தப்பட்ட 32 பகுதிகளில் இக்குழுவினர் கடந்த 4 நாட்களாக சுமார் 60,000 வீடுகளில் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனர்.


Advertisement

இவ்வாறு கணக்கெடுப்பு பணியின்போது சீரங்கன் தெருவைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா சென்று வந்ததும் அந்த நபர் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு முறையான தகவல் கொடுக்கவில்லை என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து நோய்தொற்று பரப்பியதாக மாநகராட்சி அலுவலர்கள் பரிந்துரையின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement