“இறுதியாண்டு தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் செப்டம்பருக்குள் நடத்த வேண்டும்”-யுஜிசி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட இறுதியாண்டு தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.


Advertisement

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க மார்ச் 24-ம்தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

College, University Exams Cancelled in Punjab, Announced CM Amarinder Singh  | India.com


Advertisement

கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு சில தளர்வுகளுடன் இந்த மாதம் 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களை பொருத்தவரை ஆன்லைன் கல்வி முறையையும், ஆசிரியர்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் முறையையும் கடைபிடிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை., கல்லூரிகளில் தேர்வுகள் கட்டாயம்.. செப். இறுதிக்குள் நடத்த யூஜிசி  பரிந்துரை | all universities and colleges should be conducted final year  exams: central govt - Tamil Oneindia

இதனிடையே சில பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. அதேசமயம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய உயர்கல்வித்துறை செயலாளருக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அந்தக் கடிதத்தில் யுஜிசி வழிகாட்டுதலின்படி இறுதி ஆண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இறுதியாண்டு தேர்வுகளை பல்கலைக்கழகங்கள் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வேண்டும் என யுஜிசி பரிந்துரை செய்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement