கொரோனா தொற்றிலிருந்து மீள்வதற்குள் சீனாவில் கொடூர பிளேக் நோய் பரவிவருவதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பேயனூர் நகரை சேர்ந்த 27 வயதான இளைஞர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 17 வயதான அவருடைய சகோதரருக்கும் தொற்று உறுதியானது. தொடர்ந்து இருவரும் தனித்தனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் அவர்களுடன் தொடர்பிலிருந்து 146 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மர்மோட் எனப்படும் ஒருவகை அணிலின் இறைச்சியை தின்றதால் இரு சகோதரர்களும் பிளேக் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மர்மோட் இறைச்சியை மக்கள் சாப்பிட வேண்டாம் என்றும், 2020 இறுதிவரை பிளேக் நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும், சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. புபோனிக் பிளேக் ஒரு தொற்றுநோயாகும், இது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியத்தால் ஏற்பட்ட ஒரு நோயாகும்.
இதேபோல அண்மையில் சீன விஞ்ஞானிகள் ஒரு புதிய வகை வைரஸை கண்டுபிடித்தாக தெரிவிக்கப்பட்டது. இது தொற்றுநோயைத் தூண்டும் ஆற்றலைக் கொண்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. இது மரபணு ரீதியாக H1N1-இடம் இருந்து வந்துள்ளது. இந்த புதிய வகை வைரஸ் ஜி4 (G4)என அழைக்கப்படுகிறததாக தகவல்கள் வெளியானது. இதனால் ஒட்டுமொத்த சீனாவுமே பீதியடைந்தது. இந்த ஜி4 வைரஸ் ஏற்கெனவே விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியிலிருந்தாலும், மனிதர்களிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுவதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என பின்பு தெரிவிக்கப்பட்டது சற்றே ஆறுதலாக அமைந்தது.
Loading More post
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
“கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால்...” - சக்கர நாற்காலி விவகாரம் குறித்து கமல் விளக்கம்
சூரப்பா மீதான விசாரணை அறிக்கை மீது இறுதி முடிவு எடுக்கக்கூடாது - நீதிமன்றம் உத்தரவு
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
தமிழகத்தில் வாக்குப்பதிவு ஏப்.6... வாக்கு எண்ணிக்கை மே 2...- எதற்காக இந்த இடைவெளி?
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்னென்ன? - முக்கிய அம்சங்கள்
PT Web Explainer: இணைய சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறதா சமூக ஊடக நெறிமுறைகள்?
விளையாட்டு மைதானங்கள் இனி தனியாருக்கு குத்தகை? - மத்திய அரசின் 'வருவாய்' திட்டம்!
என்னமோ எதிர்பார்த்தோம்.. என்னென்னமோ நடந்து முடிஞ்சிருச்சு! அகமதாபாத் டெஸ்ட் 'Twists'