11, 12-ம் வகுப்புகளில் 4 பாடத் தொகுப்புகள் கொண்ட பழைய திட்டமே தொடரும் என பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் "மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களின் மன அழுத்தம் மற்றும் உயர்கல்வி குறித்த அச்சத்தை போக்கும் வகையில் வேலைவாய்ப்பிற்கு ஏற்றதாக பாடத்தொகுப்பு மற்றும் விதிகளை மேம்படுத்தி நடைமுறையிலுள்ள 4 முதன்மை பாடத் தொகுப்புகளுடன் சேர்த்து புதிய வழிமுறைகள் உடன் கூடிய மூன்று முதன்மை பாடத்தொகுப்புகளை அறிமுகப்படுத்தி, மாணவர்கள் மூன்று முதன்மை பாடத்தொகுப்பினையோ அல்லது நான்கு பாடத்தொகுப்பினையோ தேர்வு செய்துகொள்ளும் வகையில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டு முதல் மேல்நிலை முதலாம் ஆண்டிற்கு நடைமுறைப்படுத்த ஆணையிடப்பட்டது.
மேல்நிலை கல்வி பாடத்திட்டத்தில் மாணவர்கள் மூன்று முதன்மை பாடங்களை மட்டும் தேர்ந்தெடுக்கும்போது அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள், வேலைவாய்ப்புகள் குறைய நேரிடும் என்ற பல்வேறு காரணங்களுக்காக 4 பாடத்தொகுப்பையே தொடர்ந்து படிக்க அனுமதிக்குமாறு பொதுமக்கள், பெற்றோர், ஆசிரியர்கள், கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலித்து 2020- 2021 ஆம் கல்வியாண்டில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள நான்கு முதன்மை பாட தொகுப்புகளைக் கொண்ட பாடத்திட்டத்தை மட்டும் அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் புதிய பாடத் திட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்ட அரசாணையை ரத்து செய்து ஆணை பிறப்பிக்குமாறும் பள்ளி கல்வி இயக்குனர் கேட்டுக்கொண்டார்.
எனவே அனைவரது கோரிக்கையை ஏற்று மாணவர்களின் நலன் கருதி நடைமுறையில் உள்ள நான்கு முதன்மை பாட தொகுப்புகளைக் கொண்ட பாடத்திட்டத்தினை மட்டும் அனைத்து பள்ளிகளிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த அரசு ஆணையிடுகிறது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்