சென்னையில் சற்று குறைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் இன்று 2 ஆயிரத்திற்கும் குறைவான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இன்று மட்டும் 4,150 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,151 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக 2 ஆயிரத்திற்கும் அதிகமாக உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று சற்று குறைந்து 1,713 கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

image


Advertisement

இதனால் சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 68,254 ஆக உயர்ந்துள்ளது. இன்றும் மட்டும் சென்னையில் 21 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். வீட்டிலிருந்து சிகிச்சை பெறுபவர்கள் உட்பட சென்னையில் மொத்தம் 24,890 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று மட்டும் சென்னையில் 1000 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று 4,150 பேருக்கு கொரோனா : 2,186 பேர் டிஸ்சார்ஜ்

loading...

Advertisement

Advertisement

Advertisement