10 லட்சம் பிசிஆர் கருவிகள் ஆர்டர் : தமிழகம் வந்த ஒரு லட்சம் கருவிகள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் ஆர்டர் செய்யப்பட்ட 10 லட்சம் பிசிஆர் கருவிகளில் ஒரு லட்சம் பிசிஆர் கருவிகள் வந்தடைந்தன.


Advertisement

தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் தென்கொரிய நிறுவனத்திடம் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி ஆர்டர் செய்யப்பட்ட 15 லட்சம் பிசிஆர் கருவிகள் கடந்த வாரம் வந்தடைந்தன. இதையடுத்து கூடுதலாக 10 லட்சம் கருவிகள் வாங்க புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, 7 லட்சம் கருவிகள் தென் கொரியாவில் இருந்தும், ஒரு லட்சம் கருவிகள் ஜெர்மெனியிலிருந்தும், அமெரிக்காவில் இருந்து ஒரு லட்சம் கருவிகளும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரு லட்சம் கருவிகளும் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

image


Advertisement

இதில் முதற்கட்டமாக தென்கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்துள்ளன. அடுத்த 3 வாரத்தில் ஆர்டர் செய்யப்பட்ட மொத்த பிசிஆர் கருவிகளும் தமிழகம் வந்தடையும் என கூறப்படுகிறது. மேலும், தற்போது தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்திடம் 4 லட்சம் பிசிஆர் கருவிகளும், மருத்துவமனைகளில் 1.6 லட்சம் கருவிகள் என மொத்தம் 5.6 லட்சம் பிசிஆர் கருவிகள் கையிருப்பில் உள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

சென்னை தளர்வுகள் : டாக்டர் சுமந்த் சி ராமன் கூறும் கொரோனா அறிவுரைகள்..!

loading...

Advertisement

Advertisement

Advertisement