மதுரையில் வழக்கம்போல் இயங்கும் விமானச் சேவைகள் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் வழக்கம்போல் விமானச் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன.


Advertisement

image

தமிழகம் முழுவதும் அதிவேகமாக பரவி வரும் கொரானா தொற்று நோய் காரணமாக ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ரயில், பேருந்து போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விமான போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


Advertisement

image

மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய பெரு நகரங்களுக்கு விமானச் சேவைகள் தொடர்ந்து வழக்கம்போல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக இன்று மதுரை விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு 6 விமானங்களும் பெங்களூருக்கு 2 விமானங்களும் இயக்கப்படுகின்றன. E- PASS பெற்றிருப்போர்களுக்கு மட்டும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்கும் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மாலை மஸ்கட்டிலிருந்து 175 பயணிகள் மதுரை விமான வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement