சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட 5 போலீசார்: கைதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் தனி அறை!

Separate-cells-allocated-for-arrested-Sathankulam-cops--as-they-face-threats-by-inmates

சாத்தான்குளம் வழக்கில் கைதான ஆய்வாளர் உள்ளிட்ட போலீசார் 5 பேரும் சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டு, கைதிகள் நெருங்காத அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன


Advertisement

காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் - பென்னிக்ஸ், சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட 5 காவலர்களில், ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 4 காவலர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, கைது நடவடிக்கை குறித்து முன்கூட்டியே அறிந்திருந்த காவலர் முத்துராஜ், காவல்துறையின் விசாரணை அழைப்பை நிராகரித்து தப்பிச் சென்றார்.

image


Advertisement

சிபிசிஐடி காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி கைது செய்தனர். இதனால், தந்தை - மகன் வழக்கில் கைது செய்யப்பட்டோரின்
எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. இந்த 5 பேரும் தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்ட சிறையில்
அடைக்கப்பட்டனர். பின்னர் சம்பந்தப்பட்ட சிறையில் அவர்களுக்கு பாதுகாப்பு பிரச்னை எழும் என்பதால் சிறைத்துறை நிர்வாகம் அவர்களை
மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றியது. அதன்படி அவர்கள் 5 பேரும் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைச்சாலைக்கு
பின்பக்கத்தில் உள்ள அவசர வழியாக உள்ளே அழைத்துச்செல்லப்பட்டனர்.

image

தற்போது அவர்கள் மதுரை மத்திய சிறையில் தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகள் அச்சுறுத்தல் அவர்களுக்கு இருப்பதாக கருதப்படுவதால் கைதிகள் யாரும் அவர்களை நெருங்காத வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement