மின்சாரம் தாக்கி உயிரிழந்த பெண் மயிலுக்கு போலீசார் ஒருவர் தேசியக் கொடி போர்த்தி மரியாதை செய்தார்.
கோவை சிங்காநல்லூர் அருகே கோவை-திருச்சி சாலையில் உள்ள ட்ரான்ஸ்பார்மரில் பெண் மயில் ஒன்று அமர்ந்துள்ளது. அப்போது மின்சாரம் தாக்கப்பட்ட மயில் அங்கேயே இறந்து தொங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் மக்கள் கூடினர்.
உடனடியாக இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் காவல்துறையினரும், மின்வாரிய ஊழியர்களும் இறந்த மயிலை மீட்டுள்ளனர். மயில் தேசியப்பறவை என்பதால் பெண் மயிலின் உடலுக்கு தேசியக் கொடி போர்த்திய காவல்துறையினர் மயிலின் உடலை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் மயில் வனத்துக்குள் புதைக்கப்பட்டது.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்