தன்னார்வலர்களை தாக்கிய டெல்லி மக்கள்?: இணையத்தில் பரவும் வீடியோ!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லியில் நாய்களை மீட்டெடுக்கும் தன்னார்வலர்களை மக்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது


Advertisement

டெல்லியைச் சேர்ந்த நெய்பர்ஹூட் வூஃப் என்ற என்ஜிஓ அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் தெருநாய்களை மீட்டெடுத்து அவற்றை பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியின் ராணி பாக் பகுதியில் உள்ள தெரு நாய்களை மீட்டெடுக்கும் போது அப்பகுதி வாசிகள் தன்னார்வலர்களை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

image


Advertisement

தன்னார்வலரான ஆய்ஷா என்பவர் தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் இது குறித்து பகிர்ந்துள்ளார். அதில், ராணிபாக் பகுதி மக்களை தங்களை கடுமையான வார்த்தைகளால் பேசியதாகவும், தங்களை கடுமையாக தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தாங்கள் வந்த காரையும் அவர்கள் சேதப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் தன்னார்வலர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். தற்போது காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரத்தம் சொட்ட சொட்ட அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டெல்லிவாசிகள் தன்னார்வலர்களை ஏன் தாக்கினர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement