பொன்.மாணிக்கவேல் நலமுடன் இருக்கிறார் - மருத்துவமனை வட்டாரம் தகவல்!  

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நெஞ்சுவலி காரணமாக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது


Advertisement

பொன்.மாணிக்கவேல் கடந்த சில ஆண்டுகளாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றார். அயல் நாடுகள், வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்ட ஏராளமான பழமையான மிக விலை உயர்ந்த கோயில் சிலைகளைக் கண்டறிந்து மீட்டு வந்தார்.

image


Advertisement

இந்நிலையில், சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தஞ்சாவூரில் உள்ள நண்பர்களை சந்திக்க சென்ற அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவர் தற்போது நலமாக உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேசமயம் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement