''நன்றி. என்னுடைய நண்பரே'' - பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த அமெரிக்க அதிபர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவின் சுதந்திர தினத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்த பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்


Advertisement

ஒவ்வொரு வருடமும் ஜூலை 4ம் தேதி அமெரிக்காவில் சுதந்திர தினம் கொண்டாடப்படும். அதன்படி நேற்று 244-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி ட்விட்டர் மூலம் வாழ்த்துகளை தெரிவித்தார்.

image


Advertisement

இது குறித்து பதிவிட்ட அவர், ''244வது சுதந்திர தினத்தை அமெரிக்கா கொண்டாடும் இவ்வேளையில் நான் அதிபர் ட்ரம்பிற்கும், அமெரிக்க மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான நாம் இந்நாளில் சுதந்திரத்தையும் மனிதத்தையும் மதித்து கொண்டாடுகிறோம்’ எனத் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் இளம்பெண் தற்கொலை: வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகிகள் தற்காலிக நீக்கம்

பிரதமர் மோடியின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நன்றி. என்னுடைய நண்பரே. அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement