சென்னை மண்டலம் உள்ளே இயங்க E pass தேவையில்லை என்று போக்குவரத்து ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் 6ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் போக்குவரத்து தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து கூடுதல் ஆணையர் கண்ணன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் கண்ணன், “சென்னை உள்ளே வாகனங்கள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்கலாம். சென்னை மண்டலம் உள்ளே இயங்க E pass தேவையில்லை. போலி E pass தகவல் கிடைக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் திங்கள் முதல் சிக்னல்கள் இயங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஜூலை 6ம் தேதி முதல் சென்னையில் அமலுக்கு வரவுள்ள தளர்வுகள் மட்டும் கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
1. சென்னைப் பகுதிகளில் இயங்கும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். ஆனால் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது
2. தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பார்சல்க்கு மட்டும் அனுமதி.
3. காய்கறிக் கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி இயங்கலாம்.
4. வணிக வளாகங்கள் (Malls) தவிர்த்து அனைத்து தனிக்கடைகள் மற்றும் பெரிய கடைகள் ( நகை, ஜவுளி போன்றவை) முன்னதாக அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி இயங்கலாம்.
Loading More post
"வாங்க மோடி... வணக்கங்க மோடி.." கொங்கு தமிழில் பாஜகவினரின் வரவேற்பு பாடல்
"நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி"-மம்தா பானர்ஜி ஆவேசம்
கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வந்தால் 7 நாள் தனிமை - தமிழக அரசு
ராக்கெட் வேகத்தில் உயரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை: ஒரே மாதத்தில் ரூ.100 உயர்வு!
சென்னை: 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது!
'ஒன்றிணைந்து செயல்படுவோம்...' - சசிகலாவின் அரசியல் வியூகம் தொடங்கிவிட்டதா?
ஆலிவ் ரிட்லி ஆமைகளைக் காக்கும் சென்னை... எப்படி, எத்தனை முட்டைகள்? - ஒரு பார்வை
ஒரு லிட்டர் பெட்ரோல் அடக்கவிலை ரூ.29.34 மட்டும்தான்... கிறுகிறுக்க வைக்கும் வரிப் பகிர்வு!
கொரோனாவுக்கு இடையே வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. உஷார் டிப்ஸ்!