விராட் கோலி வெளியிட்ட உடற்பயிற்சி வீடியோ - பீட்டர்சன் செய்த கமெண்ட்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் உடற்பயிற்சி வீடியோவைப் பார்த்த இங்கிலாந்தின் முன்னாள் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சன் அவரிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.


Advertisement

 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தீவிரமாக உடற்பயிற்சி செய்பவர் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து அவர் தனது உடற்பயிற்சி சார்ந்த வீடியோக்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அண்மையில் கூட ஹர்திக் பாண்டியா விடுத்த புஷ் அப் சவாலை ஏற்றுக் கொண்ட விராட் அந்தப் பயிற்சிக்கு கைகளை தட்டி அசத்தினார்.


Advertisement


Advertisement

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலும் ஆனது. அந்த வகையில் விராட் கோலி அண்மையில் ஒரு உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் “பவர் ஸ்னேச்” என்ற உடற்பயிற்சியை செய்திருந்தார். அத்துடன் “நான் தினமும் ஒரு உடற்பயிற்சியை செய்ய வேண்டியிருந்தால் பவர் ஸ்னேசைதான் தேர்வு செய்வேன்” என்றும் அதில் பதிவிட்டிருந்தார்.

image

 

இந்நிலையில் இந்த வீடியோவைப் பார்த்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விராட் கோலியை பைக் ஓட்டுமாறு கூறினார். அதற்கு விராட் கோலி ஓய்வுக்குப் பிறகு அதைச் செய்கிறேன் என்று பதிலளித்துள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement