கொரோனாவுக்கான தடுப்பு மருந்து பரிசோதனையின் போது பாதுகாப்பே முக்கியம் அதில் சமரசமே கிடையாது என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
புனேவைச் சேர்ந்த பாரத் பயோடெக் தயாரித்து வரும் கொரோனா தடுப்பு மருந்தான BBV152ஐ மனிதர்களிடத்தில் பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் பரிந்துரை செய்தது. முதற்கட்ட சோதனையாக விலங்குகளுக்குச் செலுத்தப்பட்டதில் வெற்றி கிடைத்ததால் அடுத்தகட்ட சோதனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இதனிடையே இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமையகமும் இந்தப் பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி ஜூலை 7 முதல் சோதனை முயற்சியாக கொரோனா தடுப்பு மருந்து பரிசோதிக்கப்பட உள்ளது என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் சோதனை முயற்சி வெற்றி அடைந்தால் ஆகஸ்ட் 15 முதல் கிசிச்சைக்கு பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக இந்தியா அளவில் 12 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. சென்னை அருகே காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனை, விசாகப்பட்டினம், ரோஹ்டாக், டெல்லி, பாட்னா, பெல்காம், நாக்பூர், கொரோக்பூர், ஹைதராபாத், ஆர்யா நகர், கான்பூர் மற்றும் கோவா ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
பரிசோதனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் மருத்துவ பரிசோதனையைத் தொடங்குவது தொடர்பான அனைத்து ஒப்புதல்களையும் விரைவாகப் பெற்று தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே ஐசிஎம்ஆரின் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தனர். ஆனால் இந்தச் சோதனைக்கு நாள் குறித்ததற்கு ஆராய்ச்சியாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டே தடுப்பு மருந்து பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக ஐசிஎம்ஆர் விளக்கமளித்துள்ளது. மேலும் இந்தப் பரிசோதனையின்போது பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?