சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலின் ஹாட் ஸ்பாட்டாக சென்னை விளங்குகிறது. குறைந்த பரப்பளவில் அதிக மக்கள் வாழ்ந்து வருவதால் சென்னையில், மற்ற மாவட்டங்களை விட கொரோனா பாதிப்பு அதிக வேகமாக பரவி வருகிறது. அங்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் ஆரம்பத்தில் கொரோனா வேகமாக பரவி வந்தாலும் உயிரிழப்புகள் என்பது பெரிதாக இல்லை. ஆனால் சமீப காலமாக அதற்கும் பெரிய இடத்தை கொடுத்திருக்கிறது சென்னை. ஆம் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000 த்தை தாண்டியிருக்கிறது.
இன்று மட்டும் இதுவரை சென்னையில் கொரோனாவுக்கு 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
ராஜீவ் காந்தி மருத்துவமனை - 12
கே.எம்.சி மருத்துவமனை -1 ( கோவிட் மற்றும் இணை நோய்கள் )
ஓமந்தூரார் மருத்துவமனை -4
ஸ்டான்லி மருத்துவமனை -6
தனியார் மருத்துவமனைகள் -3
நேற்று மட்டும் தமிழகத்தில் 4329 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1 லட்சத்தை தாண்டியுள்ளது . சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1022 ஆக அதிகரித்துள்ளது.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!