காவல்துறை மக்கள் மீது செய்யும் அத்துமீறல்களை விசாரிக்க நிலையான அமைப்பை வேண்டி மக்கள் நீதி மய்யம் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பி.என் பிரகாஷ், புகழேந்தி அமர்வு விசாரணை செய்து வருகிறது. அதன்படி இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் வரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும் சிறிதளவும் தாமதம் ஏற்படுத்தக்கூடாது எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி ஜெயராஜ் வீடு, கடை ஆகிய இடங்களில் ஆய்வு செய்து பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்துப் பேசிய சிபிசிஐடி ஐ.ஜி சங்கர், “தந்தை, மகன் கொலை வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய காவலர் முத்து ராஜ் இரண்டு நாட்களுக்குள் பிடிபடுவார். அவரை தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும்,சம்பவம் நடந்த அன்று பணியாற்றிய பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிப்போம். இவ்வழக்கில் சிபிசிஐடி நியாயமாக விசாரித்து வருகிறது.இதில் அரசியல் தலையீடு இல்லை. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான சில பதிவுகள் கிடைத்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது?
சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.— Kamal Haasan (@ikamalhaasan) July 3, 2020Advertisement
இந்நிலையில் காவல்துறையினரால் பாதிக்கப்படும் மக்களின் வழக்குகளை உடனடியாக விசாரிக்கச் சரியான, நிலையான அமைப்பு வேண்டும் என்ற கருத்தை மக்கள் நீதி மய்யம் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் " சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வதுக்குப் போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது? சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது" என்று தெரிவித்துள்ளார்.
Loading More post
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தலா? - இன்று மாலை தேதி அறிவிப்பு
விவசாயிகள், ஏழைகளின் நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி: முதல்வர் அறிவிப்பு
தேசியகுழு உறுப்பினர் முதல் மாநில செயலாளர் வரை... தா.பாண்டியனின் அரசியல் பயணம்
”அடித்தட்டு மக்களுக்காகவே வாழ்ந்தவர்” - தா.பாண்டியன் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்
இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கும் தலைமை தேர்தல் ஆணையர்- தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!