பாஜக மாநில துணைத் தலைவரானார் வி.பி.துரைசாமி !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திமுகவிலிருந்து விலகி பாஜகவுக்குச் சென்ற வி.பி.துரைசாமிக்கு மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தவர் வி.பி.துரைசாமி. இவர் சமீபத்தில் பாஜக மாநில தலைவர் முருகனைச் சந்தித்திருந்தார். இதனையடுத்து, திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.பி.துரைசாமி நீக்கப்படுவதாக ஸ்டாலின் அறிவித்தார்.

image


Advertisement

இது தொடர்பாக அப்போது பேட்டியளித்த துரைசாமி “கருணாநிதி அழைத்தார் என்பதால் 2001-ஆம் ஆண்டு மீண்டும் திமுகவிற்கு வந்தேன். திமுகவில் சேர்ந்த என்னை 2006-ல் துணைச் சபாநாயகர் ஆக்கி அழகுபார்த்தார் கருணாநிதி. இப்போது, திமுகவின் அடிமட்ட தொண்டன் பொறுப்பிலிருந்து என்னை நீக்குமாறு தலைமைக்குக் கடிதம் எழுதியுள்ளேன்" எனத் தெரிவித்துவிட்ட பாஜகவில் இணைந்தார்.

இப்போது துரைசாமிக்கு பாஜகவின் மாநில துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், அக்கட்சியில் அண்மையில் இணைந்த வழக்கறிஞர் பால் கனகராஜுக்கு மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

loading...

Advertisement

Advertisement

Advertisement