உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள கிரிஜா தேவி கோயில் படிக்கட்டிகளை ஏறிச் செல்லும் யானையின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இந்தக் கோயிலில் யானைகள் நடமாடும் காட்சி கடந்த ஜூன் 28 ஆம் தேதி அங்குப் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது. கோயில் முன்பாக நடமாடும் யானைகளில் ஒன்று மிக அழகாக மனிதர்களைப் போல் படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல முற்படுகிறது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்துடன் கருத்திட்டு வருகின்றனர்.
இந்தக் காணொளிப் பதிவு குறித்து வனத்துறை அதிகாரி கோசி கூறும் போது “ யானைகள் உணவு தேடி கோயிலுக்கு வந்திருக்கலாம். முன்பு உணவிற்காக இந்தப் பகுதிக்கு வந்த யானைகளுக்குக் கோயில் பக்தர்கள் உணவு பிரசாதங்களை வழங்குவர். கோயிலைச் சுற்றி நிறையக் கடைகளும் உள்ளன. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாகக் கோயில் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளது. இருந்தாலும் யானைகள் வழக்கம் போல அதன் வளாகத்தினுள் வந்துள்ளன” என்றார்.
வெளியிடப்பட்ட சிசிடிவி காட்சியில் மொத்தம் மூன்று யானைகள் இடம்பெற்றுள்ளன. அதில் ஒரு யானைதான் கோயிலின் உள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டுகளில் ஏறுகிறது. இந்தக் காணொளி தற்போது வைரலாகி வருகிறது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!