தந்தை, மகன் கொலை வழக்கு: கைதான 3 பேருக்கும் ஜூலை 16 வரை காவல் !

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தந்தை, மகன் மரண வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேருக்கு ஜூலை 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Advertisement

சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் மரணம் தொடர்பாகக் கொலை வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக் காவலர் முத்தையா உட்பட 5 போலீசாரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். இதில் ஸ்ரீதர் உட்பட மூன்று பேருக்கு தற்போது மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

image


Advertisement

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 3 பேருக்கு ஜூலை 16 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement