பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கான் தன்னுடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியதாக அந்த அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிராண்ட் பிளவர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை செயல்பட்டார். அப்போது தனக்கு ஏற்பட்டு அனுபவத்தை "கிரிக்கெட் போட்கேஸ்ட்" எனும் நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டார். இப்போது இலங்கை அணியின் பயிற்சியாளராக கிராண்ட் பிளவர் இருந்து வருகிறார்.
அந்தப் பேட்டியில் "பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் யூனிஸ் கானை சமாளிப்பது மிகவும் கடினம். பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியின் இடைவேளையில் ஒரு சம்பவம் நடந்தது. அப்போது நான் அவருக்கு பேட்டிங் குறித்து சில ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஆத்திரமடைந்த அவர் கத்தியை எடுத்து என் கழுத்தில் வைத்துவிட்டார். அப்போது பதறிய மற்றவர்கள் யூனிஸ் கானை சமாதானப்படுத்தினார்கள்" என்றார்.
மேலும் தொடர்ந்த கிராண்ட் பிளவர் "பேட்டிங் பயிற்சியாளராக இருந்தது சுவாரஸ்யமாகவே இருந்தது. அது ஒரு கடினமான பயணம்தான். இப்போதும் கிரிக்கெட்டின் நுணக்கங்களை நான் கற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். இன்னமும் நிறைய இருக்கிறது. ஆனால் இப்போது நான் இருக்கும் நிலை எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது" என்றார்.
Loading More post
தோல்வியில் முடிந்த விவசாயிகளுடனான மத்திய அரசின் 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை
“நானே கொரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தயாராக உள்ளேன்” - அமைச்சர் விஜயபாஸ்கர்
2ஜி வழக்கு: மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப். 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
“வழக்கறிஞர் முதல் தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் வரை” - மறைந்த ஞானதேசிகனின் அரசியல் பயணம்
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நன்கொடை அளித்த குடியரசுத் தலைவர்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
திமிறும் காளைகளை திமில் தழுவி அடக்கும் காளையர் - அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வீடியோ தொகுப்பு
'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும் வரலாறும் - ஒரு பார்வை
அனல் பறக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... சீறும் காளைகள், அடக்க பாயும் வீரர்கள்! - ஆல்பம்