புகார் கொடுக்க வந்த தாய் - மகள் : அநாகரிகமான ஆபாச செயலில் ஈடுபட்ட ஆய்வாளர்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உத்தரப் பிரதேசத்தில் புகார் கொடுக்க வந்த தாய் - மகள் முன்பு அநாகரிகமான ஆபாச செயலில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் டியோரியா பகுதி காவல்நிலையத்தின் ஆய்வாளராக இருந்தவர் பீஸ்ம்பால் சிங் யாதவ். இவர் காவல்நிலையத்திலிருந்தபோது, கடந்த ஜூன் 22ஆம் தேதி தாய் - மகள் என இருவர் நிலப் பிரச்னை தொடர்பாகப் புகார் கொடுக்க வந்துள்ளனர். அப்போது தனது இருக்கையில் அமர்ந்திருந்த ஆய்வாளர் பீஸ்ம்பால், தனது பேன்ட்-ஐ கழற்றி, அநாகரிக ஆபாச செயலில் ஈடுபட்டுள்ளார்.

image


Advertisement

இதனை அப்பெண்ணுடன் வந்த மகள் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் வீட்டிற்குச் சென்றதும் தனது குடும்பத்தினரிடம் நடந்ததைக்கூறி, வீடியோ ஆதாரத்தை அப்பெண் காட்டியுள்ளார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். வேகமாகப் பரவிய இந்த வீடியோ அப்பகுதி மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதையடுத்து ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

அதன்படி, ஆய்வாளர் பீஸ்ம்பால் மீது வழக்குப்பதிவு செய்த மாவட்ட காவல்துறை, அவரை கடந்த ஜூன் 26ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்தது. அவர் மீது பாலியல் ரீதியாக அநாகரீகமாக நடந்துகொண்டது, அதிகார அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” - அறந்தாங்கி சம்பவம் குறித்து ஸ்டாலின்

loading...

Advertisement

Advertisement

Advertisement