”என்னுடைய கோரிக்கை ஒன்றே ஒன்றுதான்” - ட்விட்டரில் ரோகித் ஷர்மா வேண்டுகோள்

-My-request-to-people----Rohit-sharma-on-twitter

மருத்துவ தினத்தை முன்னிட்டு மருத்துவர்களின் பணியை பாராட்டும் வகையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


Advertisement

இன்று இந்தியா முழுவதும் மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அனைவரும் மருத்துவர்களுக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் ஷர்மா அவரது ட்விட்டர் பக்கத்தில் “ இந்தக் இக்கட்டான சூழ்நிலையில் பணிபுரியும் மருத்துவர்களின் தியாகத்தையும், துணிவையும் நாங்கள் அறிவோம். அவர்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். மக்களிடம் நான் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். தயவு செய்து அரசு அறிவுறித்தியுள்ள கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடித்து மருத்துவர்களின் பணியை எளிமையாக்குங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

யுவராஜ் சிங் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடும் போது “ எங்களுடைய உண்மையான கதாநாயகர்கள். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் சமுதாயத்திற்காக நீங்கள் அர்ப்பணிப்போடு சேவை செய்கிறீர்கள். உங்களுக்கு எனது நன்றிகள். நீங்கள் மக்களுக்காக கரிசணையோடு எடுக்கும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். நீங்கள் தன்னலமற்ற தன்மை, இரக்கம் அன்பு ஆகியவற்றின் உருவம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement