கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தப்பியோட்டம் - வழக்குப்பதிவு செய்த போலீஸ்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

(கோப்பு புகைப்படம்)


Advertisement

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஐ.சி.எப் ஊழியர் தப்பி ஓடியுள்ளார்.

image


Advertisement

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த பொத்தனூர் பகுதியைச் சேர்ந்த 29 வயது நபர், சென்னை ரயில்பெட்டி தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் விமானம் மூலம் சேலம் வந்த இவர் அதன் பின்னர் நாமக்கல் வந்துள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு அதில் கொரோனா உறுதியானது. இதனையடுத்து நேற்று இரவு அவர் நாமக்கல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கிருந்து அவர் தப்பித்து ஓடியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த நாமக்கல் போலீஸார் அவரை தேடி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement