"எதிர்காலத்தில் மாற்றம் வேண்டுமென்றால் ரோகித்தை கேப்டனாக்கலாம்" ஆகாஷ் சோப்ரா !

Rohit-can-be-appointed-as-captain-in-future-says-Aakash-Chopra

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிர்காலத்தில் மாற்றம் வேண்டுமென்றால் அப்போது ரோகித் சர்மாவை கேப்னாக நியமிக்கலாம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாருமான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.


Advertisement

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஆகாஷ் சோப்ரா இப்போது முன்னணி கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். அண்மையில் கூட தோனி ஓய்வுப்பெறுவது தொடர்பான கருத்துகளை தெரிவித்து ரசிகர்களிடம் வாங்கிக்கட்டி கொண்டார். இந்த பொது முடக்க காலத்தில் கிரிக்கெட் வீரர்களிடம் இப்போது ஆன்லைன் வாயிலாக பேட்டி எடுத்து வருகிறார். ஆனால் இப்போது யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் இந்திய அணியின் கேப்டன்சி குறித்து பகிர்ந்துள்ளார்.

image


Advertisement

அதில் "இந்திய அணி மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டது. இந்திய அணிக்கு அடுத்த 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ தலைமையில் மாற்றம் தேவைப் பட்டால் ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம். எப்போதும் கோலியின் ஆட்டத்திறன் குறைந்துவிடாது. அவரின் ஆட்டத்திறன் ஓர் உயரத்தை எட்டிவிட்டது, இப்போது அதிலிருந்து அவர் திறன் கீழே இறங்காது. இது அவர் கேப்டனாக இருந்தாலும் இல்லாமல் போனாலும் கோலியின் ஆட்டம் சிறப்பாகவே இருக்கும்" என்றார்.

image

மேலும் தொடர்ந்த அவர் "ஆனால் ஒரு அணிக்கு எப்போதும் கொஞ்சம் வித்தியாசமான வழிக்காட்டுதல் அவ்வப்போது தேவைப்படும். அந்த விஷயத்தை இந்திய அணி எட்டிவிட்டால், அப்போது ரோகித் சர்மாவை அணிக்கு கேப்டனாக்கலாம். ஆனால் அதுவரை கோலி கேப்டனாகவே தொடர வேண்டும், ஒரு கேப்டனாக அவர் உயர்ந்துகொண்டு இருக்கிறார்" என்றார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement