JUST IN

Advertisement

தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

மேலும், “ தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும். அடுத்த 48 மணி நேரங்களில் கடலோர மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


Advertisement

நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியில் பலத்த மழை எச்சரிக்கை- Dinamani

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு: கோவையில் சின்னக்கல்லார் 19 செ.மீ, சின்கோனா 14 செ.மீ, வால்பாறை 13 செ.மீ. மழை அளவு பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை, குடவாசல் ஆகிய பகுதிகளில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வைகை அணையில் 8 செ.மீ மழையும் ஆம்பூரில் ஏழு செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. வலங்கைமான், தேவாலா, வேடசந்தூரில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:


Advertisement

ஜூன் 30 : தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும்

ராமேசுவரத்தில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை - மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை  || fishermen start sailing ban in Rameswaram

ஜூன் 31 : வடக்கு அந்தமான் கடல் பகுதி, வடக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய குஜராத் கடல் பகுதி, மத்திய கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மகாராஷ்டிரா கடல் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய கர்நாடகா, வடக்கு கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும்

ஜூலை 03 மற்றும் ஜூலை 04 : மத்திய வங்கக்கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement