Advertisement

வேலூரில் அதிகரிக்கும் தொற்று: மேலும் 99 பேருக்கு கொரோனா!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வேலூரில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் நேற்று மட்டும் 2,212 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,749 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

image

சென்னையைப் பொருத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 2,167 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிப்புக்கு 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1141 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

வேலூரிலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. வேலூரில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1477ஆக உள்ளது.


Advertisement

“கொரோனா நோயாளியை அழைத்துச் செல்வதில் தாமதம்” - மாநகராட்சி மீது பெண் புகார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement