சேலம் அருகே ஆவணங்களை கேட்டதால் காவல் துறையினருடன் தகராறில் ஈடுபட்ட முன்னாள் எம்பி மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சேலம் ஓமலூர் அருகே உள்ள சுங்கச்சாவடி பகுதியில் காவல்துறையினர் நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் அர்ஜுனன் காரில் வந்துள்ளார். அவரது காரை நிறுத்தி காவல்துறையினர் விவரம் கேட்ட பொழுது தான் ஒரு முன்னாள் எம்பி என்று பதில் அளித்துள்ளார். இருப்பினும் எங்கிருந்து எங்கு செல்கிறார் என்பதற்கான முறையான ஆவணங்களை காட்டும்படி காவல்துறையினர் கேட்டுள்ளனர்.
அப்போது அவர் தகாத வார்த்தைகளில் பேசியதாக கூறப்படும் நிலையில் காவலர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்த நிலையில் காரில் ஏறிய அர்ஜுனன் மீண்டும் இறங்கி வந்து காவல் உதவி ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் எம்பி அர்ஜுனன் மீது பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் சூரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
Loading More post
71 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டே நாளில் முடிவுக்கு வந்த டெஸ்ட் போட்டி
பிராந்திய மொழிகளில் மருத்துவம், பொறியியல் கல்வி பயில அனுமதி - கோவையில் பிரதமர் பேச்சு
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்பமனு!
மார்ச் 7 ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் : பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி!
ராகுல் காந்தியின் 'வடக்கு - தெற்கு' கருத்து: அதிர்வலையும் விளைவுகளும் - ஒரு பார்வை
“இப்படியா பிட்ச் ரெடி பண்ணுவீங்க”- நரேந்திர மோடி ஸ்டேடியத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
’வடிவேலு உடல்மொழியை நினைச்சாலே பொழைச்சிக்கலாம்!’ - சிவாங்கி கலகல பேட்டி
திரையும் தேர்தலும் 7: எம்.ஆர்.ராதா தனிப்பாதை; சிவாஜியின் 'நகர்வு'; எம்.ஜி.ஆரின் எழுச்சி!