JUST IN

Advertisement

இசையால் நிரம்பும் கொரோனா பிரிவு: மருத்துவமனையில் ஒலிக்கும் இளையராஜா, ரகுமான் மெலோடிஸ்!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியாவில் கொரோனா தன் கோர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு சிகிச்சை என்பது ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் மனநிலையை சீராக வைத்துக்கொள்ள வேண்டுமென மனநல ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

அது தவறும்பட்சத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கூட சென்றுவிடுவதாக கூறப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்காமல் நாம் மனதளவில் அவர்களுக்கு கொடுக்கும் புத்துணர்ச்சி அவர்களை விரைவில் குணப்படுத்தும் என்பது மருத்துவர்களின் அறிவுரை.அதேபோல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களும் மனதளவில் தேங்கி விடாமல் அறையில் தங்கியவாறே தங்களுக்கு பிடித்த செயல்களை செய்யலாம். அதன்மூலம் அவர்கள் புத்துணர்ச்சி அடையலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

image


Advertisement

இந்நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனை , கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை புத்துணர்ச்சி அடைய வைக்க இசையை ஆயுதமாக கையிலெடுத்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அங்கு 58 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இப்போது அவர்களின் மனநிலையை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்வதும் முக்கியம் எனக் கருதும் மருத்துவமனை நிர்வாகம், இளையராஜா மற்றும் ஏ ஆர் ரகுமானின் மெலடி இசையை காற்றில் தவழ விடுகின்றனர்.

காலை 6 மணிக்கு, காலை சாப்பாட்டிற்கு பிறகு, காலை 11.30 மணிக்கு மேல் ஒரு மணி நேரம் என சீரான இடைவெளியில் மெலடி இசை ஒலிபரப்பப்படுகிறது. யாருக்கேனும் இதில் விருப்பம் இல்லை என்றால் குறிப்பிட்ட இடத்தில் பாடலை நிறுத்திவிடுவோம் என்கின்றனர் மருத்துவமனை ஊழியர்கள்.

image


Advertisement

இசை தங்களை இலகுவாக உணர வைப்பதாகவும் தேவையற்ற எதையும் சிந்திக்க விடாமல் ஒரு நேர்மறை எண்ணத்தை தருவதாகவும் சிகிச்சை பெற்று வருபவர்கள் தெரிவித்துள்ளனர்.

“இது இருந்தாலும் கொரோனாவாக இருக்கலாம்” - 3 புதிய அறிகுறிகள்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement