JUST IN

Advertisement

தேனி: கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு பற்றாக்குறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

தேனி மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பரிசோதனை கருவிகளின் பற்றாக்குறை நிலவுவது புதிய தலைமுறையின் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.


Advertisement

image

 


Advertisement

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா நோய் தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. காவல்துறையினர், மருத்துவர்கள், வருவாய் துறையினர், என அரசு அதிகாரிகள் உள்பட பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தேனி மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் நிலவி வருகிறது. வெளியூர் பயணம் மேற்கொண்டவர்கள் கூட தாங்களே முன் வந்து கொரோனா பரிசோதனை செய்ய துவங்கி வருகின்றனர்.

பொதுமக்களின் வசதிக்காக தேனி மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தொற்றை கண்டறியும் SWAB கருவிகள் செயல்பாட்டில் இருந்து வந்தது. இந்நிலையில் அங்கு SWAB சோதனை செய்யும் கருவிகள் பற்றாகுறை நிலவுவதாகவும், இதன் காரனமாக பொதுமக்கள் இந்த சோதனை செய்ய முடியாமல் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என புகார்கள் எழுந்து வந்தன. புகாரையெடுத்து அங்கு புதிய தலைமுறை கள ஆய்வு மேற்கொண்டது. இந்த கள ஆய்வில் அங்கு SWAB சோதனை செய்யும் கருவிகள் பற்றாக்குறை இருப்பது தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் கூட பரிசோதனைக்காக வந்து விட்டு மீண்டும் திரும்பினர்.

image


Advertisement

 
இது குறித்து தேனி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்திலை தொடர்பு கொண்டு கேட்டபோது “அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் SWAB கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. பற்றாகுறை ஏற்பட வாய்ப்பே இல்லை. 5000த்திற்கும் மேற்பட்ட SWAB கருவிகள் கூடுதலாக தங்களிடம் இருக்கின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக தேனி மாவட்டத்தில் தான் அதிகம் பரிசோதனை செய்யபட்டு வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால் அவர் கூறியதற்கும் கள ஆய்விற்கு நிறைய வேறுபாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement