செங்கல்பட்டு: “மருத்துவர்கள் வந்து பார்ப்பதில்லை”- கொரோனா வார்டில் உள்ளவர்கள் புகார்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனா வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் செவிலியர்களும் கடந்த ஒரு நாளுக்கு மேலாக வரவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கெனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,911 இருந்தது. இந்நிலையில் நேற்று புதிதாக 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5,073 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 75. மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2589.

image


Advertisement

கொரோனாவுக்கு மருந்து என அறிவிப்பு வெளியிட்ட பாபா ராம்தேவ் மீது வழக்குப்பதிவு 

இந்நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நாளுக்குநாள் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இதனால் அரசு மருத்துவமனையில் மூன்றிலிருந்து நான்கு நாட்கள் வரை மட்டுமே வைத்து சிகிச்சை மேற்கொண்டு அதன் பிறகு தனியார் கல்லூரிகளில் உருவாக்கப்பட்ட வார்டில் மாற்றி விடுகிறார்கள்.

தற்போது சேலையூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ வார்டில் 300-க்கும் மேற்பட்ட நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தினசரி முறையாக மருத்துவர்களும் செவிலியர்களும் வரவில்லை என்கின்ற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மேலும் இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதி முழுவதும் குப்பை பகுதிகளாக காணப்படுகின்றன. அதேபோல் கழிவறையும் முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை எனவும் கூறப்படுகிறது


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement