இன்று ஒரே நாளில் 54 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு - சிகிச்சையில் 35,656 பேர்

இன்று ஒரே நாளில் 54 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு - சிகிச்சையில் 35,656 பேர்
இன்று ஒரே நாளில் 54 பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு - சிகிச்சையில் 35,656 பேர்
 
இன்று ஒரே நாளில் 54 பேர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நோய்த் தொற்று 4 ஆயிரத்தை நெருங்கப் போகிறது. மேலும் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 82,275  ஆக உயர்ந்துள்ளது. 
 
 
மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,443 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 45,537 ஆக உயர்ந்துள்ளது. 
 
சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,992 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 53,762 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு குழந்தையும் 17 வயது சிறுவனும் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,079  பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
இந்நிலையில் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பால் இதுவரை 809 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையைப் பொறுத்த மட்டும் இறப்பு சதவிகிதம் 1.50% ஆகப் பதிவாகியுள்ளது. செங்கல்பட்டில் மட்டும் இதுவரை 80 பேர் இறந்துள்ளனர். இங்கு இறப்பு சதவிகிதம் 1.58% ஆகப் பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 61 பேர் இறந்துள்ளனர். இங்குச் சதவிகிதம் 1.73% ஆக உள்ளது. மதுரையில் 25 பேர் உயிரிழந்த நிலையில் அங்குச் சதவிகிதம் 1.25% ஆகப் பதிவாகியுள்ளது. காஞ்சிபுரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு 0.96% ஆக இறப்பு விகிதம் பதிவாகியுள்ளது. 
 
 
மேலும் தமிழகத்தில் 35,656 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் தமிழகத்தில் குழந்தை முதல் 13 வயது வரை சிகிச்சை பெறுவதில் ஆண்களின் எண்ணிக்கை 2057 ஆக உள்ளது. பெண்கள் 1955 பேர்.  ஆக மொத்தம் 4,012 பேர். மேலும் 13 வயது முதல் 60 வயது வரை சிகிச்சை பெற்று வருவதில் ஆண்களின் எண்ணிக்கை 42,658 ஆக உள்ளது. இதில் பெண்கள் 25,830 பேர்.  ஆக மொத்தம் 68,509 ஆகும். 60 வயதுக்கு மேலானவர்களின் ஆண்கள், 6030 ஆகவும் பெண்கள், 3724 ஆகவும் மொத்த எண்ணிக்கை 9,754 ஆக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com