தென்காசியில் போலீசார் தாக்கியதால் ஆட்டோ ஓட்டுநர் இறந்ததாகக் கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் விகே புதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமரேசன் என்பவர் நேற்று நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் விசாரிக்க அழைத்து சென்று அடித்ததால்தான் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள், வீரகேரளம்புதூர் பேருந்து நிறுத்தம் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த ஓட்டுநர் குமரேசனின் தந்தையான நவனீத கிருஷ்ணன், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார். இந்நிலையில் காவலர் மற்றும் எஸ்.ஐ என இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?