JUST IN

Advertisement

உலகளவில் ஒரு கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.


Advertisement

சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.தொற்று நோயாக பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் கூட திணறி வருகின்றன. இந்நிலையில் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியுள்ளது.

image


Advertisement

worldometers என்ற இணையதளம் வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு விவரங்களின்படி இந்த எண்ணிக்கை விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை 1,00,80,224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன. 5,01,262 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். 54,57,945 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு குணமடைந்துள்ளனர்.

image

அதிகபட்சமாக அமெரிக்காவில் 25,96,537 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 1,28,152 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் 13,15,941 பேரும், ரஷ்யாவில் 6,27,646 பேரும் கொரோனாவால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. இதுவரை 5,29,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

அமெரிக்க உளவு விமானங்களை விரட்டிய ரஷ்யா

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement