JUST IN

Advertisement

விவசாயி.. விவசாயி.. “ பாடல் பாணியில் களத்தில் இறங்கிய தோனி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி விவசாயம் செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு எந்தப் போட்டிகளிலும் பங்குகொள்ள வில்லை. இதனால் அவரது ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் அவரைக் காண ஆவலுடன் இருந்தனர். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஐபிஎல் போட்டிகளும் காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டன. இதனால் தோனியின் மறுபிரவேசத்திற்கும் வாய்ப்பில்லாமல் போனது.

தோனி சமூக ஊட்டங்களில் பரவலாக வராமல் இருந்தாலும், அவரது மனைவி அவர் குறித்த செய்திகளையும், வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டில் தோனியின் அன்றாட நடவடிக்கை குறித்த செய்திகள், புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் உள்ளிட்டவற்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த காணொளிப் பதிவுகள் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றன.


Advertisement
 
 
 
View this post on Instagram

Exclusive Video Of Mahi Bhaiya Enjoying Doing Organic Farming !! ❤

A post shared by MS Dhoni Fans Club (@dhoni.bhakt) on

அந்த வகையில் தற்போது தோனியின் காணொளி அவரது ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் தோனி ட்ராக்டரில் அவரது பண்ணை வீட்டில் உழவு செய்து கொண்டிருக்கிறார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement