JUST IN

Advertisement

டிக்டாக் பிரபலத்தின் திடீர் தற்கொலை - சமூக வலைதளங்களில் குவியும் இரங்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டிக்டாக் பிரபலம் சியா காக்கர் என்பவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

டெல்லியைச் சேர்ந்த சியா காக்கர் என்பவருக்கு டிக்டாக்கில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டகிராமிலோ ஒருலட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். சியாவின் நடன வீடியோக்களும், புகைப்படங்களும், அளவுக்கு அதிகமான ரசிகர்களின் லைக்குகளால் திணறிவிடும்.

Siya Kakkar suicide – 16-year-old Tik Tok star's ultimate movies present  her dancing and speaking about love hours earlier than demise - Bharat  Samachar Hub


Advertisement

ஆறு நாட்களுக்கு முன் பஞ்சாபி பாடலுக்கு சியா ஆடிய நடனத்துக்கு இன்ஸ்டகிராமில் மட்டும் ஒரு லட்சத்து 14 ஆயிரம் லைக்குகள் குவிந்தன. ஆனால் அதுதான் சியாவின் கடைசி நடனம் என்பது அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. அனைவரையும் தனது தற்கொலையின் மூலம் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறார் சியா.

16-Year-Old TikTok Star Siya Kakkar Dies By Suicide In Delhi

சியாவின் திடீர் முடிவு குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள அவரது மேலாளர் அர்ஜூன் சரின், முந்தைய நாள் இரவில் புதிய ப்ராஜெக்ட் குறித்து பேசியபோது சியா மிகவும் உற்சாகமாக இருந்ததாக கூறுகிறார். சியாவின் தற்கொலைக்கான காரணம் பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement