JUST IN

Advertisement

கொரோனாவால் ஊடகவியலாளர் உயிரிழப்பு - ஸ்டாலின், ஓபிஎஸ், கனிமொழி இரங்கல்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொரோனாவால் உயிரிழந்த தனியார் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகனின் மறைவுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Advertisement

தனியார் தொலைக்காட்சியில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தவர் வேல்முருகன் (40). கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வேல் முருகன் உயிரிழந்தார். கொரோனாவால் சென்னையில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேல்முருகனின் மறைவுக்கு அரசியல் கட்சியைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

image


Advertisement

வேல்முருகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ் தொலைக்காட்சியின் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது. வேல்முருகன் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும், ஊடகத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பொதுப் பணியில் ஈடுபடும் ஊடகத்துறை நண்பர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்வீட்டில், மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். முன்கள வீரர்களாகப் பணியாற்றும் ஊடகத் துறையினர் தங்களின் பாதுகாப்பிலும் கவனம் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். வேல்முருகனின் இறப்பிற்கு திமுக எம்பி கனிமொழியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Advertisement

கொரோனாவால் உயிரிழந்த தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

"2005 நிவாரணப் பணிக்கும் 2020 சீன ஆக்கிரமிப்புக்கும் என்ன தொடர்பு?": ப சிதம்பரம் கேள்வி

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement