செய்யூர் திமுக எம்எல்ஏ ஆர்.டி அரசுக்கு கொரோனா

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் திமுக எம் எல் ஏ ஆர்.டி. அரசுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 384 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த வரிசையில் சென்னையில் இன்று ஒரே நாளில் இதுவரை மட்டும் கொரோனாவால் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

image


Advertisement

இந்நிலையில் செய்யூர் திமுக எம் எல் ஏ ஆர்.டி. அரசுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா பரவலைத் தடுக்க அரசியல் கட்சியினர் பல்வேறு களப் பணிகளை ஆற்றி வருகின்றனர். அந்த வகையில் செய்யூர் திமுக எம்எல்ஏ களப் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு லேசான அறிகுறி இருந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து திமுக எம் எல் ஏ ஆர்.டி அரசுக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏற்கனவே அரசியல் கட்சியினர் பலரும் கொரோனா தொற்றுக்கு ஏற்றபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement