JUST IN

Advertisement

‘குழந்தை இல்லையெனக் கூறி கொடுமை’ - ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு ஹைதராபாத்தில் 32 வயது பெண் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement

தெலங்கானாவின் ஷம்ஷாபாத் நகரில் வசித்து வந்தவர் லாவண்யா (32). இவர் கணவர் வெங்கடேஷ், விமானியாக பணியாற்றி வருகிறார். இருவரும் 2012ம் ஆண்டு காதல் திருமணம் செய்த நிலையில், அந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வியாழன் இரவு ஃபேஸ்புக்கில் வீடியோ வெளியிட்ட லாவண்யா, தன்னை கணவர் கொடுமைப்படுத்துவதாகவும், அதனால் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார்.

image

இதனைக் கண்ட லாவண்யாவின் உறவினர்கள் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். லாவண்யாவின் பெற்றோர், வெங்கடேஷைத் தொடர்புகொண்டு தகவலைத் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவர் வீட்டிற்குச் சென்று பார்ப்பதற்குள் லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Advertisement

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் லாவண்யாவின் உடலைக் கைப்பற்றினர். மேலும் தற்கொலை தொடர்பான கடிதம் ஒன்றையும் கைப்பற்றி உள்ளனர். குழந்தை இல்லாததால் கணவரும் அவரது குடும்பத்தினரும் மன உளைச்சல் கொடுத்ததே தற்கொலைக்கு காரணம் எனக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள லாவண்யா, அதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக லாவண்யாவின் கணவர் வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

image

வெங்கடேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக புகார் அளித்துள்ள லாவண்யாவின் பெற்றோர் அவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்


Advertisement

image

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல.  தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)

 

திருமண ஸ்தலமாக மாறிய சின்னாறு சோதனைச் சாவடி - எளிமையாக நடைபெறும் திருமணங்கள்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement