JUST IN

Advertisement

கொரோனாவால் உயிரிழந்த கர்ப்பிணி: சிசுவைக் காப்பாற்றி மருத்துவர்கள் சிகிச்சை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அமெரிக்காவில் கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், அவரது குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளனர்.


Advertisement

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பேடன் ரூஜைச் சேர்ந்த 29 வயது கர்ப்பிணி ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். மே மாதம் கடைசியில் கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் அவருக்கு வெண்டிலேட்டர்கள் பொருத்தப்பட்டு தீவிர கிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

ஒரு மாத காலமாக தீவிர சிகிச்சையில் இருந்த அந்த பெண் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளார். அவர் கர்ப்பிணியாக இருந்த நிலையில் 25 வாரங்கள் ஆன பெண் குழந்தையை மருத்துவர்கள் உயிருடன் காப்பாற்றியுள்ளனர். ஒரு கிலோவிற்கும் குறைவான எடை கொண்ட குழந்தை தற்போது மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

image

இது குறித்து தெரிவித்துள்ள உயிரிழந்த பெண்ணின் உறவினர் ஒருவர், கொரோனாவை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உங்களது வாழ்க்கையை முடித்துக்கொள்ளாதீர்கள். பாதுகாப்பாக இருங்கள். முன்னெச்சரிக்கையாக இருங்கள். இது விளையாட்டல்ல எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement

ஆதரவு இல்லாமல் வீதியில் தவித்த மூதாட்டி - மீட்டு முகாமில் சேர்ந்த இளைஞர்கள்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement