“வாழ்வாதாரம் இல்லை, சேமிப்பு திட்டப் பணத்தைக் கொடுங்க” - வங்கி முன் போராடிய நபர்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கோவையில் தனியார் வங்கியில் சேமிப்பு திட்டத்தின் மூலம் மாதந்தோறும் செலுத்திய பணத்தை பொது முடக்கத்தின் நெருக்கடியால் கேட்டு இளைஞர் போராடினார்.


Advertisement

கோவை மாவட்டம் மருதமலை சாலை முல்லை நகர்ப் பகுதியைச் சேர்ந்த தமிழ்வாணன் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதி டிவி சுவாமி சாலை பகுதியில் உள்ள பிரபல தனியார் வங்கி ஒன்றில் வைப்புத் தொகை திட்டத்தின் கீழ் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து, மாதந்தோறும் ரூ.4,000 ரூபாய் தொகையைச் செலுத்தி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கால் மூன்று மாதங்களாக வாழ்வாதாரமின்றி தவித்து வந்த இவர், மூன்று மாதமாகத் தவணை தொகையைச் செலுத்தாமல் இருந்துள்ளார்.

image


Advertisement

மேலும் வீட்டு வாடகை செலுத்தக் கூட பணம் இல்லாததால், தான் கட்டிய சேமிப்பு பணத்தைத் திரும்ப எடுப்பதற்காக வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால் வங்கி நிர்வாகம் ஐந்து வருடம் கழித்து மட்டுமே பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளனர். அத்துடன் பிரபுவை வலுக்கட்டாயமாக வெளியேற்ற முற்பட்டதாகத் தெரிகிறது.

image

இதனால் ஆத்திரமடைந்த அவர், தன் பணத்தை தனக்குக் கொடுக்க வேண்டும் எனப் பதாகையில் எழுதி கையில் ஏந்தியபடி வங்கி வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் நான்கு மணி நேரத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, தகவலறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் வங்கி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தமிழ்வாணனின் புகாரைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். இதைத்தொடர்ந்து தனது போராட்டத்தை அவர் கைவிட்டார். இதன் காரணமாக வங்கி வளாகத்தில் சலசலப்பு ஏற்பட்டது.


Advertisement

பொது முடக்கத்தினால் வேறு மாநிலம் செல்ல தடை - எல்லையில் நடந்த திருமணங்கள்..!

loading...

Advertisement

Advertisement

Advertisement