JUST IN

Advertisement

ஐரோப்பிய நாடுகளில் பொது முடக்க தளர்வுகளால் மீண்டும் கொரோனா பாதிப்பு!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொது முடக்க தளர்வுகள் அளிக்கப்படுவதால் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.


Advertisement

வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது

image


Advertisement

பொது முடக்க தளர்வுகள் அளிக்கப்படுவதால் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் ஐரோப்பிய மண்டல இயக்குநர் ஹன்ஸ் க்லுக் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த இரு வாரங்களில் ஐரோப்பாவில் உள்ள 30 நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து இருப்பதாக கூறினார். அதில், 11 நாடுகளில் கொரோனா பரவல் விகிதம் மிக அதிகமாக உயர்ந்துள்ளதால், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவில்லை எனில் அந்த நாடுகள் மீண்டும் தொற்று நோயின் ஹாட் ஸ்பாட்டாக மாறலாம் என அவர் எச்சரித்தார்.

image

எனினும், நாடுகளின் பெயர்கள் மற்றும் புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையை அவர் தெரிவிக்கவில்லை. இதனிடையே, ஜெர்மனியில் புதிய பாதிப்புகள் உயர்ந்ததால் இரு மாவட்டங்களில் மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பான் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் முழுவீச்சில் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.


Advertisement

ஊரடங்கை மீறி கடை திறப்பு: எடை இயந்திரத்தை தூக்கி வீசிய தலைமைக் காவலர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement