நடிகை பாவனா கடத்தலில் அதிரடி திருப்பம்… ஸ்டார் ஹீரோவுக்கு தொடர்பு? 

Bhavana-molestation-case---Pulsar-Sunil-says-popular-Malayalam-filmstar-involved-in-this-case

நடிகை பாவனா கடத்தப்பட்ட சம்பவத்தில் மெகா ஸ்டார் ஒருவர் பின்னணியிலிருந்து செயல்பட்டதாக சுனில் பல்சர் தெரிவித்துள்ளது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 
நடிகை பாவனா கடந்த பிப்ரவரி 17ம் தேதி இரவு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் தனியாக சென்று கொண்டிருந்த போது பின்னால் வேனில் வந்த ஒரு கும்பல் காரை மறித்தது. பின்னர் அந்த வேனில் இருந்த 3 பேர் காருக்குள் அத்துமீறி ஏறி பாவனாவை மிரட்டி பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கியது. செல்போனில் அவரது ஆபாச படங்களை எடுத்ததாகவும்  கூறப்படுகிறது.


Advertisement

இதுகுறித்து கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்சர் சுனில், பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின், பிரதீப் உள்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்தின் பின்னணியில் முக்கியப்புள்ளிகளின் தொடர்பு இருப்பதாக மலையாள சினிமாவுலகினர் கூறி வந்தனர்.  அதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில், இந்தச் சம்பவத்தில் மலையாள திரையுலகின் முக்கிய நபர்கள் இருவர் இருப்பதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுனில் பல்சர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் தகவலை
சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ள சக கைதி ஒருவருடன் சுனில் பல்சர் பகிர்ந்து கொண்டது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
கொச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முக்கியக்குற்றவாளி சுனிலுடன் மற்றொரு வழக்கில் கைதாகி உள்ள திருச்சூர் மாவட்டம், சாலக்குடியைச் சேர்ந்த ஜின்ஸி என்பவர் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் பாவனா கடத்தல் விவகாரம் தொடர்பாக பல விஷயங்களை சுனில் பல்சர் பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. ஜின்ஸியிடம்’ மலையாள ’மெகா ஸ்டார்’ ஒருவர் கூறியதால் தான் பாவனாவை கடத்தினோம்’ என சுனில் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போது, இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. பல்சர் சுனிலிடம் விசாரணை இன்னும் முடியவில்லை. இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த புதிய தகவலை ஜின்ஸியிடம் எழுத்துப்பூர்வமாகவும், வாக்குமூலமாகவும் பதிவு செய்துள்ளோம். அதனை நீதிபதியிடம் சமர்ப்பிக்க உள்ளோம் என கேரள காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement