மதுரையில் இன்று 204 பேருக்கு கொரோனா : மற்ற மாவட்டங்களில்..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மதுரை மாவட்டத்தில் இன்று மட்டும் 204 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Advertisement

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவிப்புகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் 3,509 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 32,543 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 2,236 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 39,999 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். அத்துடன் 30,064 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும் 45 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

image

சென்னையில் மட்டும் இன்று 1,834 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 47,650 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தைக் காணலாம்.

image


Advertisement

அரியலூர் - 10, செங்கல்பட்டு - 191, கோவை - 29, கடலூர் - 21, தருமபுரி - 1, திண்டுக்கல் - 15, ஈரோடு - 5, கள்ளக்குறிச்சி - 25, காஞ்சிபுரம் - 98, கன்னியாகுமரி - 53, கரூர் - 3, மதுரை - 204, நாகை - 10, நாமக்கல் - 1, நீலகிரி - 2, பெரம்பலூர் - 8, புதுக்கோட்டை - 1, ராமநாதபுரம் - 140, ராணிப்பேட்டை - 20, சேலம் - 89, சிவகங்கை - 25, தென்காசி - 12, தஞ்சை - 22, தேனி - 72, திருப்பத்தூர் - 18, திருவள்ளூர் - 170, திருவண்ணாமலை - 55, திருவாரூர் - 5, தூத்துக்குடி - 24, நெல்லை - 11, திருப்பூர் - 7, திருச்சி - 27, வேலூர் - 172, விழுப்புரம் - 40, விருதுநகர் - 28 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர வெளிநாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 20, உள்நாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 3,509 பேருக்கு கொரோனா : மொத்த எண்ணிக்கையில் 70,000ஐ கடந்தது.!

loading...

Advertisement

Advertisement

Advertisement