“விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிப்பதால் நாடு வளர்ச்சி பெறும்” - இஸ்ரோ தலைவர் சிவன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc
 
விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிக்கும் முடிவை வரவேற்றுள்ள இஸ்ரோ தலைவர் சிவன், தனியார் நிறுவனங்களை சட்டப்பூர்வமாக ஒருங்கிணைத்து மேற்பார்வை செய்ய பிரத்யேக அமைப்பு ஒன்று உருவாக்கப் பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
 
image
 
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டது. இதை வரவேற்றுள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் சிவன், விண்வெளித் துறையில் தனியாரை அனுமதிப்பதன் மூலம் நாட்டின் முழு திறமையையும் வெளிப்படுத்த முடியும் என்று கூறினார். 
 
image
 
நாடு தொழில்நுட்ப ரீதியில் விரைவான வளர்ச்சி பெறும் என்றும் சிவன் கூறியுள்ளார். மேலும், ராக்கெட் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் தனியார் நிறுவனங்களை சட்டப்பூர்வமாக ஒருங்கிணைத்து, மேற்பார்வை செய்ய இந்தியத் தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப் பட்டிருப்பதாகவும் சிவன் தெரிவித்துள்ளார்.
 
image
 
இது குறித்து சிவன், “இந்தப் புதிய சீர்திருத்தம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பல கண்டுபிடிப்புகளை வைத்திருக்கும் இளைஞர்கள் இதைப் பயன்படுத்தி முன்வருவார்கள். ஏற்கனவே பல நிறுவனங்கள் முன்வந்துள்ளன. உலக அளவில் விண்வெளி பொருளாதாரத்திற்கான முக்கிய மையமாக இந்தியா விளங்கும் என நம்புகிறோம். தனியார் நிறுவனங்கள் விண்வெளி செயல்பாடுகளில் பங்கேற்று, உலக அளவில் தொழில்நுட்ப சக்தியாக இந்தியாவை உருவாக்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 
loading...

Advertisement

Advertisement

Advertisement