பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 10 பேருக்கு கொரோனா!!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.


Advertisement

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இம்மாதம் 28-ஆம் தேதி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் அவர்களது உடல்தகுதி குறித்த அறிக்கை அளிப்பதற்காக, 35 வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஆரோக்கியத்துடன் இருந்த 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம், அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது.

image


Advertisement

ஹாரிஸ் ராஃப், ஹைதர் அலி, சதாப் கான் ஆகிய மூன்று பேருக்கு ஏற்கெனவே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் நட்சத்திர வீரர் முகமது ஹஃபீஸ், வஹாப் ரியாஸ், ஃபக்கர் ஸமான் உள்ளிட்ட மேலும் 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வீரர்கள் யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

image

நெகட்டிவ் என வந்த வீரர்கள் அனைவருக்கும்  25 ஆம் தேதி மீண்டும் பரிசோதனை செய்துவிட்டு திட்டமிட்டபடி இங்கிலாந்து பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும், கொரோனா உறுதியான வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கவனிக்கப்படுவார்கள்.


Advertisement

image

சில நாட்களுக்கு பின் அவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு பரிசோதனைகள் செய்யப்படும். முழுவதும் குணமடைந்து இரு பரிசோதனைகளிலும் நெகட்டிவ் என முடிவு வந்தால் மட்டுமே அவர்கள் இங்கிலாந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பின்னர் அணியில் இணைந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளனர்,

மேற்குவங்கம்: கொரோனாவுக்கு எம்எல்ஏ உயிரிழப்பு

loading...

Advertisement

Advertisement

Advertisement