JUST IN

Advertisement

நோய்த் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதாக கணவன்- மனைவி மீது வழக்குப்பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நோய்த் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதாகக் கூறி கொரோனா தொற்றுக்குள்ளான கணவன்- மனைவி  மீது  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Advertisement

image

சென்னை சூளைமேடு திருவள்ளூவர் புரத்தில் வசித்து வந்த கணவன்- மனைவி இருவருக்கும் கடந்த 11-ம்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கணவர், சென்னை துறைமுகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து  இருவரும்  வீட்டிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement

ஆனால் இவர்கள் இருவரும்  முகக் கவசமும், கை உறைகளும் அணியாமல் மக்களிடையே நோயை பரப்பும் விதமாக வெளியே சுற்றித் திரிவதாக சூளைமேடு போலீசில், சென்னை மாநகராட்சி 9-வது மண்டல சுகாதாரத்துறை ஆய்வாளர் இந்திரபிரசாத் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த சூளைமேடு போலீசார் கணவன்- மனைவி ஆகிய இருவர் மீதும்   188- அரசு உத்தரவை மீறுதல், 269- உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயை பரப்பக் கூடிய வகையில் கவனக்குறைவான செயலில் ஈடுபடுதல்,  ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement