பகலில் சுட்டெரிக்கும் வெயில்.. இரவில் வானிலை மாறி மண்ணை குளிர்விக்கும் மழை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையில் அசோக் நகர், கே.கே. நகர், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.


Advertisement

தமிழகத்தில் அக்னிநட்சத்திர காலகட்டத்தில்தான் சென்னையில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகி வந்தது. ஆனால் கத்திரி வெயில் காலம் முடிவடைந்த பின்பும் கடந்த சில நாள்களாகத் தமிழகத்தில் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது. ஆகவே மக்கள் அதிகம் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். வெயில் ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்த வண்ணம் உள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பகலில் வெயில் சுட்டெறித்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து மண்ணை குளிர்விக்கின்றது.

image


Advertisement

இந்நிலையில், இன்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சென்னையில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. கே.கே நகர், நெசப்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேலும் பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. பெருங்களத்தூர், வண்டலூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, நங்கநலூர் பகுதியிலும் மழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இந்த மழை காரணமாக பூவிருந்தவல்லி நகர் பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

image


Advertisement

இதையடுத்து காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. ஓரிக்கை, செவிலிமேடு, குருவிமலை, வெள்ளைகேட், பூக்கடைசத்திரம், பெரியார்நகர், ரங்கசாமிகுளம், மூங்கில் மண்டபம், வாலாஜாபாத், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர் உத்திரமேரூர் ,சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, ஆகிய பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக இடி மின்னல்களுடன் கன மழை வெளுத்து வாங்கியது.

கடந்த இரண்டு நாட்களை விட இன்று மூன்றாவது நாளாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன மழை பெய்து வருவதால் நீர் நிலைகள் நிரம்புவதாலும், கோடை வெப்பம் தணிவதாலும் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த கன மழையால் காஞ்சிபுரத்தில் பல இடங்களில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் 74.20 மி.மீட்டர் அளவு மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

image

இதனிடையே திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒரு மணிநேரமாக பெய்தது. அதே போல் செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

loading...

Advertisement

Advertisement

Advertisement