அன்று டீக்கடை வியாபாரியின் மகள்.. இன்று விமானப்படை அதிகாரி.. வென்று காட்டிய அஞ்சல் கங்வால்

Anchal-Gangwal-Tea-Seller-s-Daughter-Becomes-Indian-Air-Force-Pilot

ஒரு டீக்கடை வியாபாரியின் மகள் தன்னுடைய விடாமுயற்சியால் இன்று இந்திய விமானப்படையில் விமானியாக மாறி தனதுக் கனவை சாத்தியமாக்கிருக்கிறார்.


Advertisement

தடைகள் என்றுமே ஆழமான கனவுகளைச் சிதைப்பதில்லை என்பதை தனது உழைப்பால் மீண்டும் ஒரு முறை பறை சாற்றிருக்கிறார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான அஞ்சல் கங்வால். இன்று அவர் இந்திய விமானப்படையின் விமான அதிகாரி. வானில் பறக்கத் தயாராகி விட்டார். ஆனால் அந்தக் கனவை நிஜமாக்குவதற்கு அவரும், அவரது குடும்பத்தாரும் பூமியில் நடத்திய போராட்டங்கள் எண்ணிடலங்காதவை.

image


Advertisement

அஞ்சல் கங்வாலின் தந்தையான சுரேஷ் கங்வால் ஒரு டீ வியாபாரி. மத்தியப் பிரதேச மாநிலம் நீமுச் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் டீ விற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார். ஒரு சமயம் கேதர்நாத் நகரம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கியவர்களை விமானப்படை அதிகாரிகள் துணிச்சலாக மீட்டு மக்களை காப்பாற்றினர்.

image

 அந்தச் சம்பவம் அஞ்சல் கங்வால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. தானும் இதே போல் மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்று எண்ணி விமானப் படை அதிகாரியாக மாற வேண்டும் என்றக் கனவை கையில் எடுத்தார் அஞ்சல். தந்தையின் ஒத்துழைப்பாலும், தனது விடாமுயற்சியாலும் கிட்டத்தட்ட 4 முறை விமான அதிகாரிக்கான தேர்வில் தோல்வியடைந்து, பின்னர் மீண்டும் முயற்சித்து தற்போது விமானப்படை அதிகாரியாக வானில் பறக்கத் தயாராகி விட்டார்.


Advertisement

image

இது குறித்து அவரது தந்தைக் கூறும் போது “ கேதர்நாத் வெள்ளப்பாதிப்பு அவரை என்னவோ செய்து விட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்ட விமானப்படை அதிகாரிகளின் துணிச்சல் அவளுக்கு தானும் ஒரு விமானப்படை அதிகாரியாக மாற வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. அன்றே அவள் அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடத்தொடங்கி விட்டார். படிப்பில் படு சுட்டியான அவர் ஒரு பேஸ்கட் பந்து வீராங்கனையும் கூட.

image
ஆனால் அவருக்கு இந்தப் பயணம் அவ்வளவு எளிதாக அமைந்து விட வில்லை. பல முறை என்னால் அவளின் கல்விக்கட்டணத்தைச் செலுத்த முடியாமால் போயிருக்கிறது. பல நேரங்களில் பல இடங்களில் கடன் வாங்கி அவளின் கல்விக்கட்டணத்தை செலுத்தியிருக்கிறேன். 25 வருடம் அவரின் கனவுக்காக டீ விற்று இருக்கிறேன் அவள் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை கல்விக்கட்டணத்தை பள்ளி நிர்வாகம் கேட்கும் என்பதற்காக நான் சில நேரங்களில் ஊருக்கு வெளியே சென்று மறைந்து இருந்திருக்கிறேன். இன்று அவள் வானில் பறக்கத்தயாராகி விட்டார். கொரோனா பரவலால் அவரின் பதவியேற்பு விழாவில் எங்களால் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் எனக்கு மிகப் பெருமையாக இருக்கிறது” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement